2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குடும்பத்தலைவரை காணவில்லை

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது - 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வீட்டுக்கு வருவதாக கடந்த 12ஆம் திகதி காலை 8.30 மணியளவில் அவர் தனது மனைவியிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் அலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.

இந்நிலையில் அவரது மனைவி சனிக்கிழமை (14) அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் குடும்பத்தலைவர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவித்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X