2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் 

கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், நேற்று (18) காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கரவெட்டியைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளத்துக்கு, நேற்று மாலை (17), தொழிலுக்காகச் சென்றவர்களில் சுந்தரம் புலேந்திரன் என்பவர் வீடு திரும்பவில்லையென, அவரது உறவினர்களால், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, நேற்றைய தினம் அதிகாலை, குளக்கரையில் சடலமொன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, சுந்தரம் புலேந்திரனின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .