2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘குத்தகை வேண்டாம்’

எம். றொசாந்த்   / 2019 மே 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்தை எதிர்த்து சந்தை வியாபாரிகள் நாளை புதன்கிழமை (29) சந்தையை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை தீர்மானித்து, அதற்கான கேள்வி கோரலையும் விடுத்துள்ளது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சந்தை குத்தகைக்கு விடப்படுவதனால், வியாபாரிகள் மாத்திரமின்றி நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை நகர சபை கைவிட வேண்டும்.

அத்துடன், வியாபரிகள், உற்பத்தியாளர்கள் நுகர்வோர் ஆகியோரின் வாகனங்களை பாதுகாக்கும் விதமாக வாகன பாதுகாப்பு தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும், உழவர் சந்தையை மாற்றியமைக்க வேண்டும், எனவும் கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதேவேளை தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு நகர் பகுதி வர்த்தகர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X