2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

’குமுதினி’ நேற்று முன்னரே திரும்பியதால் பலரும் அல்லல்

Editorial   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நெடுந்தீவுக்கான  போக்குவரத்தில் ஈடுபடும் குமுதினி படகின் பயண நேரம் திடீரென மாற்றப்பட்டதால், சுமார் நூற்றுக்கான பயணிகள், அரச உத்தியோகஸ்தர்கள், பெரும் சிரமங்களுக்கு மத்தியில், நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானுக்குத் தமது பயணத்தை மேற்கொண்டனர். 

வீதி அபிவிருத்தி  அதிகார சபை  உத்தியோகத்தர்கள் இருவருக்காகவே, அந்தப் படகின் பயண நேரம் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கான பயணிகள்  போக்குவரத்தில் ஈடுபடும் குமுதினி படகு, குறிகாட்டுவானில் இருந்து, நேற்று (02) காலை 8 மணிக்கு நெடுந்தீவு நோக்கிப் பயணித்து, நெடுந்தீவிலிருந்து பிற்பகல் 3.30  க்கு, குறிகட்டுவான் நோக்கிப் பயணிப்பதற்கான நேர ஒழுங்கே இருந்தது. 

எனினும், வீதி அபிவிருத்தி அதிகார சபையில்  இருந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் இருவர், திரும்பிச் செல்வதற்கு  மாத்திரம்  அதனுடைய பயண நேரம் மாற்றம் செய்யப்பட்டு,  இரண்டு உத்தியோகத்தர்களை மாத்திரம்  ஏற்றிக்கொண்டுஇ பகல் 1.50  மணிக்கே சென்றுள்ளது  

இதனால், நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவானுக்குப் பயணிக்க வேண்டிய சுமார் 80க்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. 

எனினும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் படகு, நோயாளிகளுக்காகப் பயன்படுத்துகின்ற அம்புலன்ஸ் படகு  என்பவற்றின் மூலம்  இரண்டு படகுகளிலும் சுமார் 170க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறிகட்டுவான் நோக்கி, மாலை 4 மணிக்குப் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .