2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு திறந்து வைப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடம் இன்று (23)  திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.

மத்திய அரசின் குறித்தொதுக்கப்பட்ட 27 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் வடமாகாண சுகாதார அமைச்சால் இக்கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அ.பரம்சோதி மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .