2025 ஜூலை 23, புதன்கிழமை

‘குற்றச்செயல்களைத் தடுக்க இராணுவம் வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

“வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்ற கொள்கையை நாம் கொண்டிருந்தாலும், இராணுவத்தை அவசரத் தேவைக்கும் அழைக்கக் கூடாதெனக் கூறுவது, குற்றச் செயல்களுக்கு சாதக நிலையை உருவாக்கும்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில், வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார். 

இது குறித்து, நேற்று (02) கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “முப்படையினரையும் களமிறக்கப்போவதாக, பொலிஸ்மா அதிபர் கூறவில்லை. பொலிஸாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினரையும் இராணுவத்தையும், மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்கவிருப்பதாகவே கூறினார். அவருடன் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் தந்து வைத்தார். யார் வேண்டுமானாலும் குற்றச்செயல்கள் பற்றி தமக்கு முறைப்பாடு செய்யலாம் எனத் தெரிவித்தார். 

“வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன். ஆனால், குற்றங்கள் இடம்பெறும் போது அவற்றைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .