Freelancer / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சியில் சப்ரா என்ற குளத்தில் நேற்று நீராடிய போது காணாமல் போயிருந்த
வடமராட்சி வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் மணிவண்ணன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்தில் நீராடுவதற்காக நேற்று மாலை குறித்த குடும்பஸ்தர் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குறித்த குடும்பஸ்தர் வீடு திரும்பாத நிலையில் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து நேற்றுமாலை முதல் இரவிரவாக அப்பகுதி மக்கள் தேடுதல் நடத்தியுள்ளனர்.
நீண்ட நேர தேடுதலின் பின்னர் குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .