2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

குளத்தில் மூழ்கி இளைஞன் பலி

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

முள்ளியவளை மதவாளசிங்கன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் இந்திரன் தகீசன் (வயது 21) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

6 இளைஞர்கள் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் நீண்ட நேரமாக கரை திரும்பாத நிலையில் குறித்த இளைஞர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (04) அதிகாலை குறித்த இளைஞரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X