Editorial / 2020 ஜூலை 12 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டதன் காரணத்தால் தான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாகத்துக்குக் காரணமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், உரெழுவில் உள்ள என்.கே மண்டபத்தில், நேற்று (11) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசாங்கத்துடன் பேசி தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்போம் என்று கூறியவர்கள், இன்று பேரம் பேசி அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு ஆசைப்படுகின்றார்களென்றார்.
தேர்தலின் பின்னர், தமது கூட்டணி மேலும் விரிவுப்படுத்தப்படுமெனவும், சுரேஷ் தெரிவித்தார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago