Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 15 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடித்து வருவதாக, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் கே.எம்.நிலாம் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“வீட்டுத் திட்டம் வடக்கு மாகாண செயலணி ஊடாக செயற்படுத்தப்படவுள்ள நிலையில், அத்திட்டம் மத்திய அரசாங்கத்தால் வழங்க முடியாது எனவும் ஆனால், குறித்த வீட்டுத் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே வழங்க முடியும் எனவும், வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.
“இவர், யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அதிகாரங்கள் தங்களுக்குதான் இருப்பது போன்றும் எமது பிரதேசத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் தங்களால்தான் நடைபெற்றது என்பது போன்றும் உண்மைகளைத் திரிவுபடுத்தி கூறி வருகின்றார்” எனக் குறிப்பிட்டார்.
இவர்களுடைய நீண்ட நாள் திட்டம், எமது மக்களை மீள்குடியேற்றுவதைப் போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப் போன்றும் பாசாங்குகாட்டி, எமது மக்களை அலைக்கழிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதனால் எமது மக்கள் காணிகளை விற்றுவிட்டு பிரதேசத்தை நோக்கி சென்று விடுவார்கள் என நினைப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இறுதியில் எம்மை வைத்தே எம்மை இனச் சுத்திகரிப்பு செய்வதே, இவர்களின் திட்டமாகுமென, அவர் மேலும் தெரிவித்தார்.
3 minute ago
34 minute ago
55 minute ago
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
34 minute ago
55 minute ago
25 Sep 2025