Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“பிரபாகரன் ஏற்றுக்கொள்ளாத அரசமைப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்” என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆயுத குழுக்களாக செயற்பட்டவர்கள் இன்று மாவீரர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர். யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், விடுதலை புலிகளை அழிக்க உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இன்று மாவீரர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது நாம் நன்கு அறிவோம். அதேபோல், இன்று ஈ.பி.டி.பியினர் மாவீரர் தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றார்” என்றார்.
மேலும், “இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பிரபாகரன் ஏற்றுக்கொள்ளாத அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்துக்கு ஒப்பான ஒற்றையாட்சி தொடர்பில் உருவாக்கப்பட்ட அரசமைப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்படுகின்றனர். இவர்கள் கிளிநொச்சியில் உள்ள உங்களிடமும் வருவார்கள்” எனவும் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago