Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கூட்டுச் சேர்வது தொடர்பில் சிந்தித்தே முடிவெடுப்போம். அந்தவகையில், கொள்கை அடிப்படையில் ஒன்றிப்போக கூடியவர்களுடன் தான் கூட்டு சேருவோம். அவர்களுடன் தான், தமிழ்த் தேசிய அரசியலைச் சரியாகக் கொண்டு செல்வோம்” என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கயைல்,
“யுத்த தகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்து கொண்டு, நான், பத்மினி சிதம்பரநாதன் உள்ளடங்கலாக, நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடினோம். அந்த நற்பெயரை வைத்து, சம்பந்தன் இன்று உள்ளார். அன்று போராடிய நாம், வீதியில் நிற்கின்றோம்.
“இந்தியாவுக்குத் தேவையற்றவையை நான் பேச மாட்டேன் என சம்பந்தன் சொன்ன பிறகே வெளியேறினோம். இப்போது மீண்டும் நாம் கூட்டுச் சேர்ந்த பின்னர், எம்முடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் பேரம்பேச்சுக்கு விலை போனால், மீண்டும் பிளவு ஏற்படும். அப்போதும் நாமே மோசமானவர்களாக வீதியில் நிற்போம். மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதனால் கூட்டுச் சேர்வது தொடர்பில் சிந்தித்தே முடிவெடுப்போம்” என்றார்.
மேலும், “கித்துள் மரம் தவிர்ந்த ஏனைய மரங்களில் இருந்து கள் இறக்க முடியாது என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது எதற்கு என இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கில் கள் இறக்கும் தொழில் செய்வோர் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.
“பனை தென்னை அபிவிருத்தி சங்கங்கள் சமாசங்களுக்குக் கூட தடை செய்யப்படுவது தொடர்பில் தெளிவுபடுத்தலோ முன் அறிவிப்போ கொடுக்கப்படவில்லை. இவ்வாறான தடையைக் கொண்டு வருவது தொடர்பில் மாகாண அமைச்சுடன் கலந்தலோசிக்கவில்லை.
“இந்தத் தடையை நாம் முற்று முழுதாக எதிர்க்கின்றோம். இந்த தடையால் பாதிக்கப்படப்போகின்ற மக்களுக்குக்காகப் போராடுவோம்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
54 minute ago
1 hours ago
3 hours ago