Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். நிதர்ஷன்
“தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக, சட்டமா அதிபருடன் மிக விரைவில் கலந்துரையாடவுள்ளேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் , வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
மாகாணசபை உறுப்பினர் எஸ்.சிவயோகம் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக வழக்குகள் தாக்கல் செய்யப்படாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிலர், சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனை, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அது ஏற்றுகொள்ள கூடிய விடயமாகும். என்னைச் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலர், சிறையில் உள்ள தங்கள் உறவினர்கள் தொடர்பான போதிய விவரங்களை என்னிடம் வழங்கவில்லை. இந்நிலையில், அந்த விவரங்களை அவர்களுடைய சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொண்டு பெறுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.
54 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago