Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இன்னும் இரண்டொரு நாளில் சாதகமான பதிலை தருவதாக, உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, நேற்று முன்தினம் (18) உறுதியளித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை நேற்று முன்தினம் (19) சந்தித்து கலந்துரையடும்போதே, அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
இதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டொரு நாளில் சாதகமான பதிலைப் பெற்றுத் தருவதாக கைதிகளிடம் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த (14) ஆம் திகதியில் இருந்து இன்றுடன் 6ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
20 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
29 minute ago
40 minute ago