Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வேலணைக் கிழக்கு - 3ஆம் மற்றும் 4ஆம் ஆகிய வட்டாரங்களில், கந்தன் கடவைக் கிராமத்தின் குடியிருப்புக்காக வழங்கப்பட்டக் குடியேற்றத் திட்டக் காணிகளில், அரசாங்கத்தால் மீளவும் கையகப்படுத்தப்படவுள்ள காணிகள், காணியற்றவர்களுக்கு வழங்கப்படவுள்ளனர்.
இதற்கமைய, இது தொடர்பான கலந்துரையாடலொன்று, வேலணைப் பிரதேச செயலகத்தில், புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது.
இக்காணிகளின் உரித்துடையோர், 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வெளியேறியதுடன், அவர்களில் பலர், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். அத்துடன், சிலர் மரணித்து விட்டனர்.
இதனால், குறித்த காணிகள் பராமரிப்பின்றிக் காணப்படுவதால், அக்காணிகளை அரசாங்கம் மீள அரசுடைமையாக்கி, அக்காணிகளைக் காணியற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
33 minute ago
35 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
35 minute ago
52 minute ago