Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 17 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்றக் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸ் அதிகாரிக்கும் உத்தியோகஸ்தருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில், நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு, நல்லூர் பிரதேச செயலாளரால், வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரி ஒருவரிடம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும் உத்தியோகஸ்தர் ஒருவரும், அச்சுறுத்தி கையூட்டுப் பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், அதன் ஒரு கட்டமாக விசாரணைகளுக்கு இடையூறுமின்றியும் விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் தலையீட்டை தவிர்க்கும் முகமாகவும் கோப்பாய் பொலிஸ் அதிகாரியை நெடுந்தீவுக்கும், உத்தியோகஸ்தரை காங்கேசன்துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, திருநெல்வேலி மற்றும் கல்வியங்காட்டு ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளை அண்மித்த வியாபரிகளிடமும் கோப்பாய் பொலிஸார் கையூட்டு பெற்று வருவதாக, வியாபரிகள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு வழங்க தமக்கு அச்சமாக உள்ளதாகவும் முறைப்பாடு வழங்கிய பின்னர் விசாரணைகள் என நேர விரயம் செய்ய தாம் விரும்பாததால், முறைப்பாடு செய்யவில்லை எனவும், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீன் வியாபாரியிடம் கையூட்டு பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் விசாரணை குழுவுக்கு இரகசிய வாக்குமூலம் வழங்க தயார் எனவும், அவர்கள் தெரிவித்துள்னர்.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago