Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 மே 06 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளின் மேல் பிரிவுகளை நாளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கல்லூரியின் மண்டபம் ஒன்றில் மேல் மாடியில் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் வாள் ஒன்று வீசப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் அதனை மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago