2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கொடி ஏற்றாத சர்வேஸ்வரன் தொடர்பில் ஆலோசனை

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் நடவடிக்கை தொடர்பில், நாளை (20) சட்ட மா அதிபர் காரியாலயத்துக்குச் சென்று ஆலோசனை பெறவுள்ளதாக, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வவுனியா - ஈரப்பெரியகுளம் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாகாண அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன், தேசிய கொடியை ஏற்றுவதற்கு, அவருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் புறக்கணித்து மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வட மாகாண ஆளுநரிடம் இன்று (19) வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த ஆளுநர், “மாகாண அமைச்சர்  சர்வேஸ்வரனுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் கேட்டு வருகின்றனர். இது குறித்து, சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக, நாளை (இன்று திங்கட்கிழமை), கொழும்புக்குப் பயணிக்கவுள்ளேன்.”

இதேவேளை, தேசியக் கொடி ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த வடமாகாண அமைச்சர் சர்வேஸ்வரன், தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்று, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். 

“வடமாகாண கல்வி அமைச்சர்  சர்வேஸ்வரன், உண்மையாக கல்வித் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொண்டவரானால், அவரது நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று” நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என, அமைச்சர் திசாநாயக்க குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .