2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கொத்தலாவ சட்டமூலத்தை மீள பெறுமாறு கோரி போராட்டம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

கொத்தலாவ சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழகத்தில், இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழக நுழைவாயில் முன்னால், மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அரச பல்கலைக்கழக முறைமை நீர்த்துப்போகச் செய்யும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறு, கல்விசாரா ஊழியர்களின பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குங்கள், கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவ சட்டமூலத்தை கிழித்தெறி, இலவசக் கல்வியை பாதுகாக்க இலங்கையராக ஒன்றிணைவோம், எதிர்கால மாணவர்கள் கடனாளிகளாக மாற வேண்டுமா உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாககளை தாங்கியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், உயர் கல்வியை இராணுவ மயமாக்குவதையும் தனியார் மயமாக்குவதையும் எதிர்ப்போம் என்றும் ஜனநாயகம் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்றும் வலியுறுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .