Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
கொரோனா என்ற அச்சமில்லாது, அனைத்து மக்களும் வாக்களிக்குமாறு, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இன்று (28) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் அனைவரும் தமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றார்.
நீங்கள் உங்களுக்கு சேவை செய்யக் கூடிய சரியானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப நீங்கள் கட்டாயம் தேர்தலில் பங்குபற்ற வேண்டுமெனவும், அவர் கூறினார்.
கொரோனா என்று பயப்படாமல் தங்களுக்குரிய இந்த வாக்களிக்கும் வாய்ப்பை பாவித்து எங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும், ஆயர் தெரிவித்தார்.
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago