Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
கொரோனொ வைரஸ் தொற்று நோய் சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால், கொரோனோ அபாயம் நீங்கும் வரையில், குறித்த அத்தியட்சகரைப் பணியில் இருந்த நீக்கி, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், குறித்த வைத்திய அத்தியட்சகர், தங்களுடன் சேர்ந்துச் செயலாற்றுவதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக, தமக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதாவது, குறித்த வைத்திய அத்தியட்சகர், நோயாளிகள் உள்ளே வருகின்ற போது, அவர்களைப் பகுத்தாய்ந்து, பிரித்தறிந்து நோயாளிகளை ஏற்று நடைமுறைப்படுத்த தனக்கு கஷ்டம் என்று கூறுவதாகத் தெரிவித்த காண்டீபன், அதனால் அங்கு வருகின்ற நோயாளிகளைச் சரியான முறையில் பராமரிப்பதற்கு வைத்தியர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறினார்.
குறிப்பாக, அங்குள்ள வைத்தியர்கள், குழுவொன்றை அமைத்து அதனூடாகச் செயற்படுவதற்கும், அவ்வைத்தியர் மறுப்பு தெரிவிப்பதோடு, பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த அத்தியட்சகர், இதற்கு முன்பும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போதும், அவருக்கு எதிராக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனவெச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறுபட்ட பிரச்சினைகளை வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தியிருந்தாரெனவும் சாடினார்.
ஆனாலும், அவருக்கு எதிராக இதுவரையில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர், இப்படியான அத்தியட்சகருடன் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என அங்குள்ள வைத்தியர்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அவரை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கி, கொரோனொ நீங்கும் வரையில் வேறொரு சிறந்த வைத்திய அத்தியட்சகரை பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
22 minute ago
2 hours ago