2025 மே 17, சனிக்கிழமை

கொரோனாவுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Editorial   / 2020 மார்ச் 31 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கொரோனொ வைரஸ் தொற்று தொடர்பாக, வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி செய்யும் தொலைபேசி அழைப்பு இலக்கங்களை, வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆலோசனைகளையும் தகவல்களையும் பெற்றுக் கொளளும் முகமாகவே, தொலைபேசி அழைப்பு இலக்கங்கள், நேற்று (30)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொலைபேசி இலக்கங்கள், இந்த வாரத்தின் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் செயற்படும்.

இதற்கமைய, 021-2217982 / 021-2226666 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை மேற்கொள்வதனூடாக, பொதுமக்கள் இந்தச் சேவையைப் பெற்றுக்  கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .