2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைக்கவும்’

Niroshini   / 2021 ஜூலை 19 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வடக்கில், கொரோனாவை கட்டுப்படுத்த  சுகாதார பிரிவினருக்கு  ஒத்துழையுங்கள்  என, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு , அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஓட்டோக்களை இன்று (19) வழங்கி வைத்தப் பினன்ர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  யாழ். பொலிஸ் நிலையம் உட்பட ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கென 20 ஓட்டோக்களையும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு  20 ஓட்டோக்களையும் வழங்கியுள்ளோம் என்றார்.

பொலிஸ் நிலையங்களில்  வாகனப் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.

அதேபோல் எதிர்வரும் காலங்களில், பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் தேவையான வாகனங்கள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், 'வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் சில பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அந்த பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின் படி சில வேலைத்திட்டங்கள் பொலிஸாருடன்; இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .