Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 15 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கொரோனோ தொற்று தொடர்பில், வடக்கில் இதுவரையில் யாரும் அடையாளம் காணப்படவில்லையென, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன், அவ்வாறு தொற்று பரவினால் சிகிச்சை ஏற்பாடுகளும் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
யாழ்., பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நோயின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது.
1. உலகின் பலநாடுகளில் இந்நோய் தீவிரமாகப்பரவி வருவதால் வெளிநாட்டுப் பயணங்களை முற்றாகத் தவிர்க்கவும்.
2. இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் சீனாவின் வுகான் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வருகை தந்திருந்தால் அவர்களது வதிவிடங்களில் 14 நாள்களுக்கு தனிமையில் கண்காணிக்க வேண்டப்படுகின்றார்கள். இக்காலப்பகுதிக்குள் அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று உரிய வைத்திய ஆலோசனையைப் பெறவும்.
3. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உடையவர்கள் இவை குணமடையும்வரை வேலைத்தளங்களுக்கு செல்லாது உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளவும்.
4. இக்கிருமித் தொற்றைத் தவிர்க்க உங்கள் கைகளை வீட்டிலும் வேலைத்தலத்திலும் அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவவும். வேலைத்தலங்களில் இதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும்.
5. சூடான நீராகாரங்களை அடிக்கடி பருகவேண்டும். குளிர்பானங்களை தவிர்த்தல் நன்று.
6. உங்கள் வீட்டிலும் வேலைத்தலத்திலும் தளபாடங்கள் மற்றும் அடிக்கடி பாவனையில் உள்ள பொருட்களை கிரமமாக அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும்.
7. வடமாகாணத்தில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் தற்பொழுது மூடப்பட்டிருப்பதால் பொது இடங்களுக்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வதை தவிர்த்தல் நன்று.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago