2025 மே 22, வியாழக்கிழமை

கொல்களனை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 மே 21 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

சாவகச்சேரி நகரிலுள்ள கொல்களனை மூடுமாறு வலியுறுத்தி இன்று (21) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பசுவதையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் சிவசேனா அமைப்பின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தென்மராட்சி பிரதேச செயலகம், சாவகச்சேரி நகர சபைஆகியவற்றுக்குச் சென்று மனுக்களைக் கையளித்துள்ளனர்.

சாவகச்சேரி கொல்களன் ஒரு மாத காலத்துக்குள் மூடப்படவேண்டும். இல்லையேல் தென்மராட்சி பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன், தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X