2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கொள்ளையர்கள் தாக்குதலில் மூவர் படுகாயம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மல்லாகம் - நரியிட்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நால்வர் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (09) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கொள்ளையர்கள் இந்தத் துணிகர சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். ஆறு பேர் கொண்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

அதில் நால்வர், தண்ணீர் கேட்டு உள்ளே சென்று வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். காயமடைந்த மூவரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தக் கொள்ளையர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவரை வீட்டில் இருந்தவர்கள் நாசுக்காகப் பிடித்து, தெல்லிப்பளை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்ட நபர், அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது.

அவரிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது எதற்காக என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X