Freelancer / 2022 ஜூலை 03 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டியமை தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான 6,000 ரூபாய் பெறுமதியான உதிரிப்பாகம் ஒன்றினை கொழும்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து, அதனை யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் பொதிகள் சேவைகள் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு , அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் குறித்த பொதியினை பெற சென்ற போது , பொதி தொலைந்து விட்டது என பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்தததுடன் , பொதியினை தொலைத்தமையால் பொதியில் இருந்த பொருளின் விலையை தருமாறு கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். (R)
7 minute ago
15 minute ago
39 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
39 minute ago
53 minute ago