Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கோட்டாபய போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், அது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாக மாறுவது நிச்சயமென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, உண்மையான எந்தத் தமிழனும் வாக்களிக்கக் கூடாதெனவும், அவர் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏன் நியமித்தாரெனவும் கோட்டாபய போன்றவர்கள் ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்கள் அல்லவெனவும் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உண்மையான எந்தத் தமிழனும் வாக்களிக்கக் கூடாதெனத் தெரிவித்த அவர், ஏனென்றால் போர்க் காலத்தின் இறுதிக் கால கட்டத்தில், வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு சரணடையச் சென்றவர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனரெனவும் கோட்டாபய கூறித் தான் இது நடந்திருக்க வேண்டுமெனவும் கூறினார்.
வெள்ளைக் கொடி ஏந்தி, சரணடைய வரும் மக்களை உடனே கொன்று குவியுங்கள் என்று சொல்லக் கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வந்தால், எங்களுக்கு என்னென்ன நடக்குமென்று நாம் யோசிக்க வேண்டுமெனவும் ஆகவே அவர் வருவதால், அது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாக மாறும் என்பது நிச்சயமெனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
16 May 2025