Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
யாழ்ப்பாணம், கோட்டையில், இராணுவத்தினர் நிரந்தரமாக முகாமிடுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும், இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக முகாமிடக் கோட்டையை வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
ஒல்லாந்துக் கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பில், முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து, தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கோட்டையை இராணுவத்துக்குக் கொடுப்பதென்ற விடயம், சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. இந்த விடயத்தை, வடமாகாண ஆளுநர் தான் ஆரம்பித்து வைத்தார்.
“அவ்வாறு இராணுவத்துக்கு ஒல்லாந்துக் கோட்டையைக் கொடுக்க வேண்டுமாயின், யாழ்ப்பாண மாநகர சபையிடம் அனுமதி கோர வேண்டும்" என்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் கோட்டை, தொல்பொருள் சின்னம் என்பதை ஞாபகமூட்டிய அவர், அங்கு படையினரை முகாமிட அனுமதித்தால், பல பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் என்று குறிப்பிட்டதோடு, கோட்டையில் சுற்றுலா மையம் அமைக்க, வடமாகாண சபை கேட்டபோது, அதற்கு அனுமதி வழங்கியிருக்காத தொல்பொருள் திணைக்களம், இராணுவத்தினருக்கு அதைக் கொடுப்பது மனவருத்தத்தைத் தருவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025