2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கோணேஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பை எதிர்க்க தீர்மானம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

திருக்கோணேஸ்வரர் கோவில் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தமது கண்டனங்களை பதிவு செய்வதுடன், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியில் அமைத்துள்ள அகில இலங்கை இந்து மா மன்றத்தின் பிராந்திய அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வரின் தலைமையில், நேற்று முன்தினம் (11) கூட்டம் நடைபெற்றது.

இதன்போது , கோணேஸ்வரர் கோவில் பகுதிகளில் பெரும்பான்மையினருக்கு வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு இடம் வழங்குதல், வர்த்தக நிலையங்களை அமைத்துக் கொடுத்தல், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகள் தொடர்பில் பேசப்பட்டன.

குறித்த செயற்பாடுகளுக்கு எதிராக தமது கண்டனங்களை பதிவு செய்வதுடன், அவற்றுக்கு எதிரான நடவடிக்கைளை தொடர்ந்து முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது .

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் த. சித்தார்த்தன் ஆகியோரும் , கோணேஸ்வரர் கோவில் நிர்வாக சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X