2025 ஜூலை 23, புதன்கிழமை

கோண்டாவில், திருநெல்வேலியில் 12 இளைஞர்கள் கைது

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கோண்டாவில் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நேற்று  மாலை மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது, தங்கள் அடையாளத்தை உறுதிப் படுத்தும் ஆவணங்கள் இல்லை எனும் குற்றசாட்டில், 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை தம்மிடம்   ஒப்படைக்குமாறு கேட்ட போது, விசேட அதிரடிப் படையினரே கைது செய்தமையினால், அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது எனப் பொலிஸார் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .