2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கோழிக் கூடுக்குள் கசிப்புக் காய்ச்சல்

Editorial   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்த 32 வயது நபரொருவர், 35 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வட்டுக்கோட்டை பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அந்நபரின் வீட்டுக்கு பின்னால் உள்ள கோழிக்கூடுக்குள் இவ்வாறு கசிப்பு காய்ச்சும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .