2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கோவிலில் கொள்ளை

க. அகரன்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில், நேற்று  (04) இரவு உடைக்கப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, தங்கச் சங்கிலி உட்பட பெறுமதியான பொருட்கள் பல திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை பூசைகளுக்காக, ஆலய பூசகர் கதவைத் திறந்தபோதே, பூட்டு உடைக்கப்பட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டதை அவதானித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .