Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நவக்கிரி, மாணிக்கப்பிள்ளையார் கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
புத்தூர் - மேற்கு நவக்கரி பகுதியைச் சேர்ந்த, ஞானேஸ்வரன் நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே, வெட்டுக்காயங்களுக்கு இலக்கானார்.
சம்பவத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இளைஞன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இன்று (30) காலை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆவரங்கால் பகுதியில் இருந்து வாள்கள் உட்பட ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், நவக்கிரி பகுதி இளைஞர்களுடன் மோதியுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்ற போது, முறைப்பாட்டை பொலிஸார் பதியவில்லை என தெரிவித்த காயமடைந்த இளைஞனின் உறவினர்கள், தாங்கள் வைத்தியசாலைக்குச் சென்று முறைப்பாட்டைப் பதிவுசெய்து கொள்வதாக, பொலிஸார் கூறியதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .