2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

கௌதாரிமுனை கொலை சம்பவம்: பெண் உட்பட மூவர் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், நேற்று (26) இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 28 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனையோர் 54 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் ஆவர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப் பொருளாக படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்க் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26), யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் இருந்து கொதாரிமுனை பகுதிக்கு சுற்றுலா சென்ற குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், ஆனைக்கோட்டை - சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோஷன் என்ற 22 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X