2025 ஜூலை 02, புதன்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நல்லலூர்க் கந்தன் கோவில் திருவிழா காலம் உட்பட ஏனைய காலங்களிலும் சமூக சேவைகளில் பங்குபற்றிய சாரணியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, நல்லை ஆதீனத்தில், இன்று நடைபெற்றது.

சாரணிய சங்கத்தின் ஏற்பாட்டில், சாரணிய சங்க தலைமை மாவட்ட ஆணையாளர் இ. தவபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் கலந்து கொண்டு, சாரணியர்களுக்கு சான்றிதல்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில், நல்லை ஆதீன குரு முதல்வர் ஞான தேசிக பரமச்சாரிய சுவாமிகள், மாநகர ஆணையாளர் ஜெயசீலன் உட்பட சாரணிய சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சாரணியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .