2025 ஜூலை 23, புதன்கிழமை

சுகாதாரமற்ற உணவு: உரிமையாளருக்கு அபராதம்

Gavitha   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

குறிகட்டுவான் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவக உரிமையாளருக்கு, 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், செவ்வாய்க்கிழமை (15) தீர்ப்பளித்தார்.

குறித்த உணவகத்தில், புங்குடுதீவு சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனையின் போது, உணவகத்தில் உணலுவுப்பொருட்களை செய்பவர்கள் மேலங்கி இல்லாமல் இருந்தமை, கை நகம் வெட்டாமை, வேறு பொருட்களை தொட்டு விட்டு கைக்கழுவாமல் உணவுப்பொருட்களை தொடுகின்றமை, அசுத்தமான பொருட்களைக் கொண்டு உணவுகளை தயாரித்தல் போன்ற பல குற்றச்சாட்டுக்களுக்காக, உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உரிமையாளருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்த நீதவான், அவருக்கு அபராதப்பணத்தை விதித்ததுடன், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடந்துகொண்டால், உணவக உரிமை இரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .