2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இரகசிய முகாம்கள், சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை. அவ்வாறான முகாம்கள் நடத்தவேண்டிய தேவை இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என  இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 25  வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வீமம்காமம் பகுதியில் இரு வீடுகள் இராணுவத்தினரின் சித்திரவதை கூடமாக இயங்கி இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலளிக்கும் முகமாகவே இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X