2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சுன்னாகம் ஒயில் கலப்பு தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பணம், சுன்னாகம் பகுதியிலுள்ள மக்களுடைய குடிநீர் கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பு தொடர்பாக, பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புக்களின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றது.

சுன்னாகம் பகுதியில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பு தொடர்பான சர்ச்சைகள், பெருமளவு யாழ்.குடாநாட்டில் உருவாக்கியிருந்த நிலையில், வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கியிருந்தது.

அந்த குழுவிலிருந்து நிபுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் இறுதி அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், சுன்னாகம் நீரில் அச்சுறுத்தும் வகையிலான பார உலோகங்கள் இல்லை எனவும் குடாநாட்டு நீரில் மலக்கிருமிகளின் தாக்கம் உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  

இந்நிலையில் சுன்னாகம் குடிநீரைக் குடிக்கலாமா? குடிக்க கூடாதா? என்பதை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் கூறவேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த நீரை குடிக்கலாமா? கூடாதா? மாகாண மத்திய அரசே பதில் சொல், பாட்டன் பூட்டன் கட்டிய கிணற்றில் கழிவு ஒயில் எப்படி வந்தது? உங்கள் ஆய்வு என்ன சொல்கிறது? நிபுணர் குழுவின் அறிக்கை உண்மையை மூடி மறைக்கின்றது என்று கோஷங்களை எழுப்பினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X