Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்று கொள்ளப்பட்டு, இறையாண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். ஆகவே இந்த 13 ஆவது திருத்தம் என்பதோ அல்லது ஒற்றையாட்சியோ நிச்சயமாக ஏற்றக் கொள்ளப்பட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வியாழக்கிழமை (24) தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர் டிலான் பெரேரா 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்வை முன் வைக்கும் எனும் கருத்தை முன் வைத்துள்ளார்.
13 ஆம் திருத்தம் எந்த வகையிலும் அதிகார பகிர்வை கொண்டதல்ல. ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பகிர்வு சாத்தியமற்றது. 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு திட்டத்தை முன் வைக்கும் யோசனை என்பது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. ஐக்கிய தேசிய கட்சி இதுவரை எந்த விதமான கருத்துக்களை வைத்து இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
அவர்களும் ஒற்றையாட்சிக்குள் இந்த பிரச்சனையை தீர்க்க தான் முயற்சிகளை மேற்கொள்வார்கள். 13 ஆம் திருத்தம் என்பது எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது இனப்பிரச்சனைக்கான தீர்வு அல்ல, இலங்கை அரசாங்கம் இதுவரை 13 ஆம் திருத்தத்தில் உள்ளதை நடைமுறைப்படுத்த முடியாது உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க உள்ள கால கட்டத்தில் முதலில் அரசாங்கம் தமிழர் தரப்புடன் பேச வேண்டும். தமிழர்கள் தரப்பில் என்ன என்ன பிரச்சனைகளை இருக்கின்றது என ஆராய வேண்டும்.
தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல. அவர்கள் ஒரு தேசிய இனம். எனவே அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. தமிழர்களுக்கான அதிகாரம் உண்டு என்ற அடிப்படையில் தான் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.
ஆகவே கிடைக்கப்பட வேண்டிய தீர்வு என்பது நீடித்து நிலைக்க கூடிய வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய தீர்வாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் தீர்வாக இருக்க கூடாது.
இவற்றுக்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் முழுமையான அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய தீர்வு திட்டம் உருவாக வேண்டும் என தெரிவித்தார்.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025