2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்

George   / 2016 ஜூன் 15 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார்.

சிறுமியின் உறவுக்காரரான மேற்படி இளைஞடன் சிறுமிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, இருவரும் பாலியல் ரீதியிலான உறவு வைத்துள்ளனர். இதனால் குறித்த சிறுமி  கர்ப்பமடைந்துள்ளார். 

எனினும் சிறுமி கர்ப்பமடைந்து 4 மாதங்களுக்கு பின்னரே  தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, இது தொடர்பில் பிரதேசத்துக்கு பொறுப்பான சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் இளைஞனை கைது செய்த பொலிஸார், வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்;.

அதனையடுத்து, இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது  நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X