2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சிறுவர்களை மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமை

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சிறுவர்களை சிறந்த மனித நேயமிக்கவர்களாக உருவாக்குவது,  ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையாகும். இதன்மூலம் எமது மொழி, இனம், வாழ்க்கை, நிலம் தொடர்பான எண்ணங்களை அவர்களிடமிருந்து உருவாக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பண்டத்தரிப்பு மலரும் மொட்டுக்கள் பாலர் பாடசாலை மற்றும் பகல் பராமரிப்பு நிலையத்தின் கலை விழா நிகழ்வு, பிரான்பற்று அருளமுதிஸ்ரீ மண்டபத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு பிள்ளைகளும் ஒழுக்கமாக வளர்க்கப்பட வேண்டும். ஆரம்பம் முதல் மனிதநேயமிக்கவர்களாக அவர்களை மாற்றிவதன்  மூலமே சிறுவர்களை எந்தவொரு பாகுபாடற்றவர்களாக மாற்றமுடியும் என்பதுடன், எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கும் இது வழிவகுக்கும்.  

இன்றைய சூழலில், பல்வேறான பிரச்சினைகளை சிறுவர்கள் சந்தித்து வருகின்றார்கள். அதிலிருந்து தெளிவான பாதையில் பயணிக்கும் நிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். சிறுவர்களை நல்வழிப்படுத்தும் கடமைப்பாடு ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. சிறார்கள் நல்வழியில் பயணிப்பதன் மூலமே எமது வருங்கால சந்ததியினர் நல்ல சிந்தைனையுடன் செயற்படுவார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .