2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சுழிபுரம் மீன் சந்தை திறப்பு

George   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 27.693 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை புதன்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரனால் இந்த மீன்சந்தையானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

25.456 மில்லியன் ரூபாய் புறநெகும மூலமும், 5 இலட்சத்து 87 ஆயிரத்து 150 ரூபாய் மக்களின் பங்களிப்புடனும் மிகுதி 1.65 மில்லியன் ரூபாய் சபை நிதியிலும் இந்தக் சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

மீன்சந்தைத் தொகுதி, இறைச்சிக்கடைகள் தொகுதியென கட்டடத் தொகுதியானது அமைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தத் கட்டடத்தை திறந்து வைப்பதாகவிருந்தபோதும், அவர் வேறு நிகழ்வொன்றில் கலந்துகொண்டமையால் அவரது பிரதிநிதியாக அனந்தி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X