2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சுழல்காற்றில் சுழன்றது பொலிஸ் கூரை

George   / 2016 மே 10 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பொலிஸ் நிலையத்தின் கூரை, சுழல்காற்றுக் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (10) தூக்கி வீசப்பட்டது.

இளவாலையில் நேற்று மழை பெய்ததுடன் கூடவே, பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதியில் சுழற்காற்றும் வீசியது.

இதனால், பொலிஸ் நிலைய கட்டட கூரை தூக்கி எறியப்பட்டது. அத்துடன், அருகில் இருந்த பாடசாலையின் விளையாட்டு அரங்கு கட்டட கூரைகளும் சேதமடைந்தன.

பனைமர காவோலைகள் காற்றில் பறந்து, மின்சார இணைப்புக்கள் வடங்களை துண்டித்தமையால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் பொலிஸ் நிலையத்தின் சேவைகள் குறிப்பிட்ட நேரம்வரை பாதிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் சேதமடைந்த கட்டட கூரைகளைச் சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X