2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சி.விக்கும் கூடுதல் பாதுகாப்பு

George   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டடத்தை, வட மாகாண முதலமைச்சா் சி.வி.விக்கினேஸ்வரன்  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், கலந்துகொள்ள வந்த, முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக, பொலிஸ் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் பிரத்தியேக பாதுகாப்பு பொலிஸாரை விட, சுமார் 25க்கும் மேற்பட்ட துப்பாக்கியேந்திய பொலிஸார், ஆயுதமற்ற நிலையிலான  15க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் மற்றும்  பொலிஸ் புலனாய்வாளர்கள், குறித்த வளாகம் மற்றும் வளாகத்தை சூழ நின்று பாதுகாப்பு வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X