2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சிவப்பு விளக்கை கடந்து சென்ற பொலிஸார்

George   / 2017 ஜனவரி 27 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

திருநெல்வேலி சந்தை பகுதியில் உள்ள வீதி சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரியும் போது, அதனை மீறி, போக்குவரத்து பொலிஸார் வீதியை கடந்து சென்ற சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ள நிலையில், வீதி ஒழுங்கை சரியாக பேணி, போக்குவரத்தை இலகுபடுத்தி, விபத்தை தவிர்க்கும் நோக்குடன், வீதி அதிகார சபையினால் யாழ். பிரதான சந்திகளில், வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் திட்டம், கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பிரதான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டன.

சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதனை பின்பற்றி, போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில், சந்திகளின் விஸ்தரிப்பு போதமாமலுள்ளது. எனினும், பொதுமக்கள் சிரமங்களுக்கு மத்தியிலும் வீதி சமிக்ஞையைப் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் சட்டம்,  ஒழுங்கை மதித்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொலிஸார், இவ்வாறு வீதி ஒழுங்கை மீறி நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X