2025 மே 02, வெள்ளிக்கிழமை

சகோதரனுடன் விளையாடிய சிறுவன் பலி

Niroshini   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வட்டுக்கோட்டை - தொல்புரம் பகுதியில், நேற்று (08),சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த  சிறுவன் ஒருவன், தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

  ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த சிறுவன், நேற்றைய தினம், தனது வீட்டின் மேல் தளத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டு இருந்த போது, தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார் 

அதனை அடுத்து, குறித்த சிறுவனை மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட போதும் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில், வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .