2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘சங்கரியுடனான சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டதல்ல’

Kogilavani   / 2017 ஜூன் 28 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகவேல் சண்முகன்

வட மாகாண சபை உறுப்பினர்களான, எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், லிங்கநாதன் ஆகியோர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை, கொழும்பில், அவரது வீட்டில் வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இரவு சந்தித்திருந்தனர்.

இந்நிலையில், ஒரு மணித்தியாலமளவில் நடைபெற்ற இச்சந்திப்பு பற்றி தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், குறித்த சந்திப்பானது அரசியல் நோக்கம் கொண்டதல்ல எனத் தெரிவித்தார்.   

மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இச்சந்திப்பின்போது, வட மாகாண சபையின் அண்மைய நிகழ்வுகள், சம கால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.   

இது தவிர, வட மாகாண சபையின் அண்மைய நிகழ்வுகளைத் தொடர்ந்து, வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக, ஆனந்தசங்கரி தெரிவித்ததாகவும், அதற்குரிய ஏற்பாடுகளை தாம் செய்து தருவதாக, ஆனந்தசங்கரியிடம் தெரிவித்ததாகக் கூறினார்.   

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தலைமைப் பதவி ஏற்க வருமாறு, விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் கலந்துரையாடினீர்களா என சிவாஜிலிங்கத்திடம் வினவியமைக்கு, “இனப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நாம், அதையே முன்னிலைப்படுத்த வேண்டும். ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். பிரிந்து நின்று, மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது” என்று கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X