Princiya Dixci / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்
யாழ்ப்பாணம், சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள், இன்று வியாழக்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டன.
தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன.
இதற்காக 2.3 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பை, யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது.
குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு, புனர்நிர்மாணம் மற்றும் நில வடிவமைப்பு ஆகிய செயற்றிட்டமே முன்னெடுக்கப்படவுள்ளது.
சங்கிலியன் தோரண வாயில் அல்லது சங்கிலித்தோப்பு வளைவு என அழைக்கப்படுவது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது.
சங்கிலித் தோப்பு வளைவு, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .