2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சடலத்தை பார்க்கச் சென்ற நால்வர் கைது

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா, எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - சுதுமலை வடக்கு தமிழ்க் கலவன் பாடசாலைக்கு அரு​காமையிலான மானிப்பாய் வீதியில், நேற்று  இரவு (20) 8.40 மணியளவில், பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக, வைத்தியசாலைக்கு வருகைதந்த 4 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் கொல்லப்பட்டவருடன் அலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் கொடிகாமம் - கச்சாய் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது 23) என்ற இளைஞனே, உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக சென்ற நிலையில் குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரும் மானிப்பாய் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .